×

ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும் என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியை குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையும், 3 ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக தொடரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்முடி 2021ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பொன்முடி தொடர்ந்து எம்எல்ஏவாக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். ராகுல் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் என் கைக்கு வந்தவுடன் செயலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.

The post ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rakulganti ,Nellu ,Speaker ,Gandhi ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே...